சினிமா செய்திகள்

தலைவன் இறங்கட்டுமே : கூலி படத்தின் இரண்டாம் நாள் வசூல் விவரம்

Published On 2025-08-16 12:50 IST   |   Update On 2025-08-16 12:50:00 IST
  • நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி.
  • உலகம் முழுவதும் கூலி திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் உலகம் முழுவதும் கூலி திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த வார இறுதிவரை தமிழநாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளும் ஹவுஸ் ஃபுல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் மிக வேகமாக 3 மில்லியன் டாலர்கள் வசூலித்த ஒரு தமிழ் திரைப்படம் என்ற அங்கீகாரத்தை கூலி கைப்பற்றியுள்ளது. மேலும் உலகளவில் முதல் நாளில்  அதிகம் வசூலித்த தமிழ் திரைப்படம் என்ற பெருமை மற்றும் வரலாற்றை கூலி திரைப்படம் படைத்துள்ளது. இதற்கு முன் 140 கோடி ரூபாய் வசூலித்த லியோ படத்தின் வசூலை முந்தியுள்ளது.

படத்தின் இரண்டாம் நாள் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி திரைப்படம் தமிழ்நாட்டில் 53.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. சென்னையில் உள்ள 96.5 சதவீத திரையரங்குகளில் இன்று ஹவுஸ் ஃபுல் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News