சினிமா செய்திகள்

மாதவன் - கங்கனா ரனாவத் மீண்டும் இணைந்து நடித்துள்ள படத்தின் ரிலீஸ் அப்டேட்

Published On 2025-10-28 13:11 IST   |   Update On 2025-10-28 13:11:00 IST
  • இப்படத்தில் அவந்திகா மிஸ்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
  • படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து அடுத்தக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மாதவன், கங்கனா ரனாவத் இணைந்து நடித்த படம் 'Tanu Weds Manu Returns'. இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் 'சர்க்கிள்'.

'சர்க்கிள்' இதற்கு முன்பு பார்த்திராத ஒரு அசாதாரண உளவியல் த்ரில்லர் படம் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் அவந்திகா மிஸ்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எ.எல். விஜய் இயக்கி உள்ள இப்படத்தை ட்ரைடென்ட் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. ஊட்டி, சென்னை, ஜெய்ப்பூர் மற்றும் ஐதராபாத்தில் படமாக்கப்பட்ட பெரிய பட்ஜெட் படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து அடுத்தக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு போன்ற பல மொழிகளில் வருகிற டிசம்பர் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 'சர்க்கிள்' படம் தசரா பண்டிகையையொட்டி வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது டிசம்பர் மாதம் வெளியாகிறது. 

Tags:    

Similar News