Bigg Boss Season 9: பணப்பெட்டியுடன் வீட்டை விட்டு வெளியேறியது இவரா? - வெளியான அதிர்ச்சி தகவல்
- பார்வதி - கம்ருதீன் லவ் டிராக் ரசிகர்களை வெறுப்பேற்றியது.
- சான்ட்ராவை பாருவும் கமருதீனும் கீழே தள்ளிவிட்டது இணையத்தில் பெரும் பேசுபொருளானது.
பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாட்கள் நெருங்க நெருங்க யார் வின்னராகப் போகிறார் என்ற பதற்றமும் அதிகரித்து வருகிறது. பிக்பாஸ் போட்டியாளர் கானா வினோத் தான் தற்போது அனைவருக்கும் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளார். இவர் தான் வின்னராவார் என்ற கருத்துகளும் மேலோங்கி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி என்ன தான் 80 நாட்களை கடந்தாலும் இன்னும் இந்த நிகழ்ச்சியில் விறுவிறுப்பு இல்லை என்று தான் கூறப்படுகிறது. அதாவது, தேவையில்லாத சண்டைகள் ஆடியன்ஸை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் இல்லை என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக பார்வதி - கம்ருதீன் லவ் டிராக் ரசிகர்களை வெறுப்பேற்றியது. இந்த நிலையில் இந்த வாரம் நடைபெற்ற டிக்கெட் டூ பைனல் டாஸ்கின் கடைசி விளையாட்டில் காரில் இருந்து சான்ட்ராவை பாருவும் கமருதீனும் கீழே தள்ளிவிட்டது இணையத்தில் பெரும் பேசுபொருளானது. இதனையடுத்து இருவருக்கும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து சுபிக்ஷா வெளியேறிய நிலையில், இந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க் நடைபெற்றது. முதலில் சபரி ரூ.7 லட்ச ரூபாய் பணப்பெட்டியுடன் வெளியேறியதாக தகவல் பரவிய நிலையில், தற்போது கானா வினோத் ரூ.18 லட்ச பணப்பெட்டியுடன் வீட்டில் இருந்து வெளியேறியதாக தகவல் கிடைத்துள்ளது.
டைட்டில் வின்னர் ஆவார் என்று பெரும்பாலானோரால் கூறப்பட்ட கானா வினோத் பணப்பெட்டியுடன் வெளியேறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.