சினிமா செய்திகள்

Bigg Boss Season 9: இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் இவரா? - வெளியான தகவல்

Published On 2025-11-22 17:22 IST   |   Update On 2025-11-22 17:22:00 IST
  • கடந்த வாரம் திவாகர் வெளியேற்றப்பட்டார்.
  • இந்த வார டாஸ்க்கில் சிறந்த அணியாக மாப் மாயாவிஸ்

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் பல்வேறு மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் 100 நாட்கள் தங்கியிருப்பார்கள். டாஸ்க்குகளை கடந்து வெற்றியாளர்கள் இறுதியில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனின் முதல் வாரத்தில் இயக்குநர் பிரவீன் காந்தியும் 2 ஆம் வாரம் அப்சரா சிஜேவும் 3 ஆம் வாரத்தில் ஆதிரையும் 4 ஆம் வாரத்தில் கலையரசனும் வெளியேற்றப்பட்டனர்.

அதன்பின் வைல்ட் கார்டு போட்டியாளராக பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ், அமித் பார்கவ் ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.

அதன்பின்பு துஷார் மற்றும் பிரவீன் ராஜ் மற்றும் திவாகர் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இந்த வாரம் வீட்டின் வழக்கமான வேலைகளையே டாஸ்க் போல போட்டியாளர்கள் விளையாடினர். இதில் சிறந்த அணியாக மாப் மாயாவிஸ் அணியும் மோசமான அணியாக சாம்பார் ஸ்குவாட் அணியும் தேர்வானது.

இந்நிலையில், இந்த வார எவிக்ஷனில் கெமி வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News