சினிமா செய்திகள்
null

தனுஷின் இட்லி கடைக்கு போட்டியாக கடைபோடும் சிவகார்த்திகேயன்... மதராஸி OTT தேதிக்கு பின்னால்?

Published On 2025-09-26 13:44 IST   |   Update On 2025-10-06 15:40:00 IST
  • தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'மதராஸி' ஓ.டி.டி. தளத்தில் வெளியாவது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது.
  • அக்டோபர் 1-ந்தேதி அன்று தனுஷ் இயக்கி, நடித்துள்ள 'இட்லி கடை' வெளியாக உள்ளது.

'மெரினா' திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார் சிவகார்த்திகேயன். அதற்கடுத்து தனுஷ் நடிப்பில் வெளியான '3' படத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்தார். அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் 'மனம் கொத்தி பறவை', 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' திரைப்படங்களில் நடித்தாலும் மக்களிடையே கலவையான விமர்சனத்தை இப்படங்கள் பெற்றாலும் வணிக ரீதியாக பெரும் வசூல் செய்யவில்லை.

தனுஷ் தமிழ் சினிமாவில் பல நடிகர்களுக்கும், கலைஞர்களுக்கு வாய்ப்பளித்துள்ளார். அதில் சிவகார்த்திகேயன், அனிருத், செண்ட்ராயன், ரோபோ சங்கர் முக்கியமானவர்கள்.

2013 ஆம் ஆண்டு வெளியான 'எதிர் நீச்சல்' திரைப்படம் சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் திருப்பு முனையாக அமைந்தது. இப்படத்தை தனுஷ் தயாரித்தார். அதையடுத்து நடந்த பல நிகழ்ச்சிகளிலும், விருது வழங்கும் விழாக்களில் , சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக செல்வதும், பல நேர்காணல்களில் ஒன்றாக கலந்து கொள்வதுமாக இருந்தனர்.

இப்படியாக சில வருடங்களுக்கு திரையுலகில் நல்ல நண்பர்களாக இருந்து வந்த இருவரும் சில மன கசப்புகளால் பிரிந்தனர். அதன் பிறகு இருவரும் எந்த நிகழ்விலும் ஒன்றாக கலந்துக் கொள்வதில்லை. இருவரும் பொதுவெளியில் அவர்களை பற்றி பேசுவதையும் நிறுத்திக் கொண்டனர்.

இதற்கிடையே கடந்த ஆண்டு நடைபெற்ற 'கொட்டுக்காளி' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் பேசியது சர்ச்சையை எழுப்பியது. அவர் பேசுகையில், " நான் யாருக்கும் வாழ்க்கை கொடுத்தேன் என சொல்ல மாட்டேன், ஏன்னென்றால் என்னை அப்படி பழக்கிவிட்டார்கள்" என பேசியது சர்ச்சையானது.

இந்த நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'மதராஸி' ஓ.டி.டி. தளத்தில் வெளியாவது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. முன்னதாக 'மதராஸி' அமேசான் ஓ.டி.டி. தளத்தில் அக்டோபர் 3-ந்தேதி வெளியாகலாம் என கூறப்பட்ட நிலையில், தற்போது அக்டோபர் 1-ந்தேதியே வெளியாக உள்ளது.

அக்டோபர் 1-ந்தேதி அன்று தனுஷ் இயக்கி, நடித்துள்ள 'இட்லி கடை' வெளியாக உள்ளது. இதனால் நடிகர் சிவகார்த்திகேயன் 'மதராஸி' படத்தை ஓ.டி.டி.யில் அன்றைய தினமே வெளியிட்டு நடிகர் தனுஷை குறி வைக்கிறாரா என பேச்சுகளும், கமெண்டுகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News