சினிமா செய்திகள்

போஸ் வெங்கட், கானா உலகநாதன், ஆடுகளம் முருகதாஸ் ஆகிய மூவர் கூட்டணியில் "ஐயம்"

Published On 2025-10-27 22:13 IST   |   Update On 2025-10-27 22:13:00 IST
செந்தில் ஆண்டவர் மூவிஸ் சார்பில் ஈஸ்வரன் விஜயன் தயாரிப்பில் ந.வசந்த் இயக்கி வருகிறார்.

இலங்கையிலிருந்து வாழ்வாதாரத்தை தேடி நமது மண்ணை நம்பி வரும் ஒரு குடும்பத்திற்கு இங்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு தீர்வு காண்பது மாதிரி சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வரும் படம் ஐயம்.

செந்தில் ஆண்டவர் மூவிஸ் சார்பில் ஈஸ்வரன் விஜயன் தயாரிப்பில் ந.வசந்த் இயக்கி வருகிறார். கதாநாயகனாக பாலாஜி, கதாநாயகியாக ரெய்னா கரட் ஆகியோர் அறிமுகம் ஆகிறார்கள்.

போஸ் வெங்கட், கானா உலகநாதன், ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க தீபா சங்கர் ,கே.பி.ஒய் வினோத், மிப்பு,ரஞ்சன், விஜய் கணேஷ்,கிரேன் மனோகர்,யாசர், சுப்ரமணி, டி.என்.ஏ விஜயலட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு கமலக்கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். கார்த்திக் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு பெங்களூர், ஒசூர் தூத்துக்குடி, ராமேஸ்வரம், சென்னை ஆகிய இடங்களில் 40 நாட்களாக நடைபெற்று இறுதி கட்ட படப்பிடிப்பை நெருங்கி வருகிறது.

Tags:    

Similar News