சினிமா செய்திகள்

நீண்ட நாள் காதலரை கரம் பிடித்தார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்

Published On 2024-02-21 16:10 GMT   |   Update On 2024-02-21 16:10 GMT
  • சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்தில் நடித்தவர்.
  • 2020ம் ஆண்டு முதல் இருவரும் காதலித்து வந்த நிலையில் திருமணம்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ப்ரீத் சிங். நடிகர் கார்த்திக்கு ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து பிரபலமானார்.

தொடர்ந்து, சூர்யாவுடன் என்ஜிகே, சிவகார்த்திகேயனுடன் அயலான் உள்ளிட்ட படங்களிலும் ஹீரோயினாக நடித்தார்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். 

இந்நிலையில், ரகுல் ப்ரீத் சிங் தனது நீண்ட நாள் காதலனான ஜாக்கி பாக்னானியை இன்று கரம் பிடித்தார்.

கடந்த 2020ம் ஆண்டு முதல் இருவரும் காதலித்து வந்த நிலையில், 2021ம் ஆண்டில் தங்களுக்கிடையேயான உறவை அறிவித்தனர்.

இதைதொடர்ந்து, திருமண தேதி இன்று குறிப்பிட்டிருந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகளும் நடந்து வந்தது. 

கோவாவில் பீச் ஓரத்தில் உள்ள பகுதியில் ரகுல் ப்ரீத் சிங்கிற்கும், ஜாக்கி பாக்னானிக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமண விழாவில் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலலந்துக் கொண்டனர்.

திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், திருமண புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News