சினிமா செய்திகள்

2004-ல் நடந்த சம்பவம்: பகீர் தகவலை பகிர்ந்த நடிகை மீனா

Published On 2025-09-16 17:23 IST   |   Update On 2025-09-16 17:23:00 IST
  • எங்களுக்குள் ஆரோக்கியமான போட்டி இருந்தது.
  • அவரது மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.

சென்னை:

நடிகை சவுந்தர்யா 1972-ம் ஆண்டு கர்நாடகா மாநிலம் கோலாரில் பிறந்தார். இவர் கன்னடம், தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் பொன்னுமணி, படையப்பா, அருணாசலம், சொக்க தங்கம், தவசி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

நடிகை சவுந்தர்யா, தனது 31-வது வயதில் ஏப்ரல் 17, 2004 அன்று ஒரு துயரமான விமான விபத்தில் காலமானார். இது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

 

சமீபத்தில், சவுந்தர்யாவின் மரணம் விபத்து அல்ல, அது ஒரு திட்டமிட்ட கொலை என்று சில தகவல்கள் வெளியாகின. தெலுங்கு நடிகர் மோகன்பாபு மற்றும் சவுந்தர்யாவின் குடும்பத்திற்கு இடையே நிலத்தகராறு இருந்ததாகவும், அதன் காரணமாகவே இந்த விபத்து நடந்ததாகவும் சில சமூக ஆர்வலர்கள் புகார் அளித்தனர். இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை சவுந்தர்யாவின் கணவர் ஜி.எஸ்.ரகு மறுத்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை சவுந்தர்யா பயணித்த அதே ஹெலிகாப்டரில் தானும் பயணித்திருக்க வேண்டியவர் என நடிகை மீனா பகீர் தகவலை அளித்துள்ளார்.

அதில், எங்களுக்குள் ஆரோக்கியமான போட்டி இருந்தது. சவுந்தர்யா நல்ல நபர், எனக்கு அற்புதமான தோழி. அவரது மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அன்றைய தினம் நடந்த பிரச்சாரத்திற்கு சவுந்தர்யாவுடன் வருமாறும் என்னையும் அழைத்தார்கள். ஆனால் சூழ்நிலை காரணமாக அதனை தவிர்த்து விட்டதாகவும் நடிகை மீனா கூறினார். 

Tags:    

Similar News