சினிமா செய்திகள்
null

'சாமி' பட வில்லன் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உடல் நலக்குறைவால் காலமானார்

Published On 2025-07-13 07:08 IST   |   Update On 2025-07-13 08:15:00 IST
  • கோட்டா சீனிவாச ராவ் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
  • சாமி படத்தில் அவர் நடித்திருந்த பெருமாள் பிச்சை இன்றளவிலும் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது

நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல் நலக்குறைவால் காலமானார். சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை உயிர் பிரிந்தது.

கோட்டா சீனிவாச ராவ் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

தமிழில் சாமி, திருப்பாச்சி, சகுனி உள்ளிட்ட படங்களில் கோட்டா சீனிவாசராவ் நடித்துள்ளார்.

2015இல் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது உள்பட பல்வேறு விருதுகளை கோட்டா சீனிவாசராவ் வென்றுள்ளார்.

1999- 2004 வரை விஜயவாடா கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக கோட்டா சீனிவாசராவ் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News