சினிமா செய்திகள்
சூர்யா

உயிரிழந்த ரசிகரின் வீட்டிற்கு சென்ற சூர்யா

Published On 2022-05-29 11:05 GMT   |   Update On 2022-05-29 11:05 GMT
நாமக்கல்லில் விபத்தில் உயிரிழந்த ரசிகர் குடும்பத்திற்கு நடிகர் சூர்யா நேரில் ஆறுதல் கூறியுள்ளார்.
நாமக்கல் மாவட்ட சூர்யா ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர் ஜெகதீசன் (வயது29). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாமக்கல் போலீஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது லாரியில் மோதி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த நடிகர் சூர்யா, நேற்றிரவு நாமக்கல் மேட்டுத் தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தார். அப்போது சூர்யாவை காண பொதுமக்கள், ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


நேரில் சென்ற சூர்யா

ஜெகதீசன் வீட்டிற்கு சென்ற நடிகர் சூர்யா அவரது உருவபடத்திற்கு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவரது மனைவி ராதிகாவிற்கு ஆறுதல் கூறி, அவர்களுக்கு தேவையான உதவிகளும் மற்றும் அவரது 2½ வயது பெண் குழந்தைக்கான கல்வி உதவி வழங்குவதாகவும் தெரிவித்தார்.
Tags:    

Similar News