சினிமா செய்திகள்
விஷால்

விஷால் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Update: 2022-05-23 07:41 GMT
வீரமே வாகைச்சூடும் படத்தை தொடர்ந்து நடிகர் விஷால், தற்போது நடித்து வரும் லத்தி படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.
நடிகர் வி‌ஷால் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான ‘செல்லமே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதையடுத்து ‘சண்டக்கோழி’, ‘திமிரு’, ‘தாமிரபரணி’, ‘ஆம்பள’, ‘துப்பறிவாளன்’, ‘இரும்புத்திரை’, ‘சக்ரா’ என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். 

'வீரமே வாகை சூடும்' படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடித்திருக்கும் திரைப்படம் 'லத்தி'. இதனை புதுமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கியிருக்கிறார். 'ராணா ப்ரொடக்ஷன்' சார்பாக ரமணா மற்றும் நந்தா இப்படத்தை தயாரிக்கின்றனர். இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. 


லத்தி

இந்நிலையில் 'லத்தி' படத்தின் ரிலீஸ் தேதியை விஷால் அறிவித்துள்ளார். அதன்படி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கும் இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்த விஷால் அதனுடன் புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். 
Tags:    

Similar News