சினிமா செய்திகள்
ரஜினிகாந்த்

மாமனிதனை பாராட்டிய ரஜினிகாந்த்

Published On 2022-03-26 08:52 GMT   |   Update On 2022-03-26 08:52 GMT
சீனு ராமசாமி, விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகி இருக்கும் மாமனிதன் படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி இருக்கிறார்.
தர்மதுரை திரைப்படத்திற்குப் பிறகு டைரக்டர் சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் 'மாமனிதன்'. இந்த திரைப்படத்தை ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் சார்பாக யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். மேலும், இந்தப் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். 

தர்மதுரை படத்தை தயாரித்த ஆர்.கே.சுரேஷ், மாமனிதன் படத்தின் வெளியிடும் உரிமையை பெற்றதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. மாமனிதன் திரைப்படம் வருகிற மே மாதம் 10ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மாமனிதன் படத்தை பாராட்டி இருப்பதாக ஆர்.கே.சுரேஷ் அறிவித்துள்ளார்.



இதுகுறித்து ஆர்.கே.சுரேஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘மாமனிதனை பாராட்டிய எங்கள் (ரஜினிகாந்த்) மாமனிதனுக்கு கோடான கோடி நன்றிகள்’ என்று பதிவு செய்திருக்கிறார்.


Tags:    

Similar News