தமிழ் திரையுலகில் கண்டேன் படத்தின் மூலமாக அறியப்பட்ட நடிகை ராஷ்மி கவுதம் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் பரவிவருகிறது.
ரகசிய திருமணம் செய்து கொண்ட நடிகை ராஷ்மி கவுதம்?
பதிவு: ஜனவரி 24, 2022 14:36 IST
ராஷ்மி கவுதம்
நடிகர் சாந்தனு நடித்து வெளியான கண்டேன் படத்தில் அவருக்கு இணையாக நடித்தவர் நடிகை ராஷ்மி கவுதம். இவர் தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிகர் சிரஞ்சீவி நடிக்கும் ’போலா சங்கர்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட உள்ளார்.
ராஷ்மி கவுதமும் தெலுங்கு நடிகர் சுடிகள்ளி சுதீரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வெளியாகி வந்தன. ஆனால், இதனை மறுத்த இருவரும் நாங்கள் நண்பர்களாகத்தான் பழகி வருகிறோம் என்றனர். இந்நிலையில், தொழில் அதிபர் ஒருவரை நடிகை ராஷ்மி கவுதம் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகி வருகிறது. இதுபற்றி ராஷ்மி எந்தவொரு விளக்கமோ மறுப்போ தெரிவிக்கவில்லை.
சமூக வலைதள பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்கள் பகிர்ந்து வரும் ராஷ்மி கவுதம், அவருடைய திருமணத்தை ஏன் மறைக்க வேண்டும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Related Tags :