சினிமா செய்திகள்
போனிகபூர் - அர்ஜுன் கபூர்

போனிகபூர் மகனுக்கு கொரோனா தொற்று

Published On 2021-12-30 10:39 IST   |   Update On 2021-12-30 10:39:00 IST
போனிகபூரின் மகனும், பிரபல இந்தி நடிகருமான அர்ஜுன் கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கொரோனா இந்தி திரையுலகினரை அடுத்தடுத்து தாக்க தொடங்கி உள்ளது. பிரபல இந்தி நடிகைகள் கரீனா கபூர், அம்ரிதா அரோரா ஆகியோருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தனர். இந்த நிலையில் தற்போது இந்தி நடிகரும், தயாரிப்பாளர் போனிகபூரின் மகனுமான அர்ஜுன் கபூர் மற்றும் அவரது சகோதரி அன்ஷுலா கபூர் ஆகியோருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. 

இதுபோல் அர்ஜுன் கபூர் உறவினரும், பிரபல இந்தி பட தயாரிப்பாளரான ரியா கபூர் மற்றும் அவரது கணவர் கரண் பூலானி ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. போனிகபூருக்கும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்று தெரிய வந்துள்ளது. 



கொரோனா தொற்றில் சிக்கிய அர்ஜுன் கபூர் மும்பையில் உள்ள ஒரு ஓட்டலிலும், மற்றவர்கள் வீட்டிலும் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Similar News