சினிமா
நிவின்பாலி - ராம்

ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடிய நிவின் பாலி - ராம்

Published On 2021-10-11 20:11 IST   |   Update On 2021-10-11 20:11:00 IST
ஒரே படத்தில் பணிபுரிந்து வரும் இயக்குனரும் ராமு, நடிகர் நிவின் பாலியும் தங்களது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்கள்.
மலையாள திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நிவின்பாலி. இவர் தமிழில் ரிச்சி என்கிற படத்தில் நேரடியாக அறிமுகமானாலும் அந்த படம் அவருக்கு பெரியதாக கைகொடுக்கவில்லை. இந்த நிலையில் சில வருட இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் ராம் இயக்கத்தில் மீண்டும் நேரடி தமிழ் படம் ஒன்றில் நடித்து வருகிறார் நிவின்பாலி.

இதில் நிவின் பாலிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ராமேஸ்வரம் அருகிலுள்ள தனுஷ் கோடியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.



இந்த நிலையில் இன்று இயக்குனர் ராம் மற்றும் நிவின்பாலி இருவருக்குமே பிறந்த நாள். ஒரு படப்பிடிப்பில் இயக்குனரும் ஹீரோவும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடுவது ஆச்சரியமான விஷயம். இவர்களின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Similar News