சினிமா
பிஜு.வி.டான் போஸ்கோ

பெயரை மாற்றிய எடிட்டர் வி.டான் போஸ்கோ

Published On 2021-10-11 19:32 IST   |   Update On 2021-10-11 19:32:00 IST
தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு எடிட்டராக பணியாற்றி வரும் வி.டான் போஸ்கோ, தனது பெயரை மாற்றி இருக்கிறார்.
‘சுந்தரபாண்டியன்’ படத்தின் மூலம் எடிட்டராக அறிமுகமானவர் டான் போஸ்கோ. இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமில்லாமல், இப்படத்தின் எடிட்டிங், சினிமா துறையினரால் அதிகம் கவரப்பட்டது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியுள்ளார். தற்போது இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கிவுள்ள ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ என்ற படத்திலும் எடிட்டராக பணியாற்றி இருக்கிறார். விரைவில் ரிலீசாக இருக்கும் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

கோல்மால் படக்குழுவினருடன் டான் போஸ்கோ

கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் இருந்து பிஜு என்னும் புனைப்பெயரை தனது பெயருடன் இணைத்து பிஜு.வி.டான் போஸ்கோ என்று மாற்றி இருக்கிறார். தற்போது ஜீவா, மிர்ச்சி சிவா, பாயல் ராஜ்புட், தன்யா நடிப்பில் பொன் குமரன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் கோல்மால் என்னும் படத்திற்கு பிஜு.வி.டான் போஸ்கோ பணியாற்ற இருக்கிறார். இப்படத்தின் பூஜை போடப்பட்டு விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. மொரிஷியஸில் மிக பிரம்மாண்டமாக கோல்மால் திரைப்படம் படமாக்கப்பட இருக்கிறது.

இப்படத்தை அடுத்து மேலும் 3 படங்களில் பிஜு.வி.டான் போஸ்கோ எடிட்டிங் பணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் வெப் தொடர் ஒன்றிருக்கும் பிஜு.வி.டான் போஸ்கோ பணியாற்றி வருகிறார்.

Similar News