சினிமா
வனிதா, சமந்தா, நாக சைதன்யா

விவாகரத்து விவகாரம் - நடிகை சமந்தாவுக்கு வனிதா ஆதரவு

Update: 2021-10-10 07:00 GMT
நடிகை சமந்தா, கணவரை பிரிவதாக அறிவித்துள்ள நிலையில், அவருக்கு நடிகை வனிதா விஜயகுமார் ஆதரவு தெரிவித்து உள்ளார்.
காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக கடந்த வாரம் அறிவித்து இருந்தனர். அவர்களது பிரிவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தார் சமந்தா. இதையடுத்து பலரும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.


வனிதா

அந்த வகையில் சமந்தாவுக்கு ஆதரவு தெரிவித்து நடிகை வனிதா தெரிவித்துள்ளதாவது: “இங்கே சமூகம் என்று எதுவும் இல்லை. உன் வாழ்க்கை வாழ அறிவுரை மட்டும் தான் கூறுவார்கள். மக்கள் நாம் பதிவு செய்யும் புகைப்படங்களை மட்டும் தான் பார்ப்பார்கள். நம்மை பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை. இனி உன் வாழ்க்கையை நோக்கி நீ முன்னேறி கொண்டே இரு. உனக்கான வலிமை கூடட்டும்'' எனப் பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News