பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக நடிக்க இருக்கும் தளபதி 66 படத்தில் பிரபல நடிகர் ஒருவர் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
12 வருடத்திற்குப் பிறகு விஜய்யுடன் இணையும் பிரபல நடிகர்
பதிவு: அக்டோபர் 06, 2021 18:57 IST
விஜய்
விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை அடுத்து விஜய் நடிக்க இருக்கும் 66வது படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க உள்ள விஜய்யின் 66வது படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க உள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்க இருப்பதாக அவரே சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அதில் ரஜினியுடன் நடித்து வருகிறேன், சூர்யாவுடன் நடித்து வருகிறேன், விஜய்யுடன் நடிக்கவுள்ளேன்’ என்று கூறியிருக்கிறார். விஜய்யின் அடுத்த படத்தில் அவர் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரகாஷ் ராஜ் பேசுவதை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
ஏற்கனவே பிரகாஷ் ராஜ், விஜய்யுடன் இணைந்து ‘கில்லி’, ’போக்கிரி’, ’ஆதி’, ’சிவகாசி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இறுதியாக கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான ’வில்லு’ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த பிரகாஷ்ராஜ் அதன்பின் 12 ஆண்டுகள் கழித்து தற்போது தான் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :