சினிமா
ஹன்சிகா

‘ரவுடி பேபி’ ஆக மாறிய ஹன்சிகா

Published On 2021-10-06 13:28 IST   |   Update On 2021-10-06 13:28:00 IST
மஹா படத்தில் நடித்து முடித்துள்ள நடிகை ஹன்சிகா, புதிதாக ஒரு தமிழ் படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
தனுஷ் ஜோடியாக மாப்பிள்ளை படத்தில் அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களான விஜய், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பலருக்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்போது இவர் கைவசம் மஹா, 105 மினிட்ஸ் ஆகிய படங்கள் உள்ளன.

இந்நிலையில், நடிகை ஹன்சிகா மேலும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இப்படத்துக்கு ‘ரவுடி பேபி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பல முன்னணி இயக்குனர்களுடன் உதவி இயக்குனராகவும் பணியாற்றிய ராஜா சரவணன் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். மேலும் சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


ரவுடி பேபி பட பூஜையில் வைரமுத்து, ஹன்சிகா

செல்லதுரை ஒளிப்பதிவு செய்ய உள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க உள்ளார். ‘கவிப்பேரரசு’ வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். தீபக் துவாரகநாத் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். இப்படத்தை அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி.பிள்ளை தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.

Similar News