சூர்யா நடித்துள்ள நந்தா, ரத்த சரித்திரம் ஆகிய படங்களுக்கு ஏற்கனவே ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சூர்யா படத்துக்கு சென்சாரில் ‘ஏ’ சான்றிதழ்
பதிவு: அக்டோபர் 06, 2021 11:51 IST
மாற்றம்: அக்டோபர் 06, 2021 11:55 IST
சூர்யா
நடிகர் சூர்யாவின் 39-வது படம் ‘ஜெய் பீம்’. இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கி உள்ளார். நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. நடிகர் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நடிகர் சூர்யா, தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வருகிற நவம்பர் மாதம் 2-ந் தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தின் சென்சார் அப்டேட் மற்றும் ரன்னிங் டைம் வெளியாகி உள்ளது. அதன்படி ‘ஜெய் பீம்’ படத்தின் ரன்னிங் டைம் 164 நிமிடம் (2 மணிநேரம் 44 நிமிடம்) என்றும், இப்படத்திற்கு சென்சாரில் ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சூர்யா நடித்துள்ள படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்படுவது இது 3-வது முறை. ஏற்கனவே நந்தா, ரத்த சரித்திரம் ஆகிய படங்களுக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :