சினிமா
பாகுபலி வெப் தொடர் போஸ்டர்

ரூ.200 கோடி பட்ஜெட்டில் தயாராகும் பாகுபலி வெப் தொடர் - ஹீரோயின் யார் தெரியுமா?

Published On 2021-07-05 05:30 GMT   |   Update On 2021-07-05 05:30 GMT
பாகுபலியில் ரம்யா கிருஷ்ணன் நடித்த ராஜமாதா சிவகாமிதேவி கதாபாத்திரத்தின் இளம் வயது வாழ்க்கையை மையமாக வைத்து இந்த தொடரை எடுக்கின்றனர்.
ராஜமவுலி இயக்கத்தில் 2 பாகங்களாக வெளியான படம் ‘பாகுபலி’. இதில் பிரபாஸ், நாசர், ராணா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்து இருந்தனர். சரித்திர கதையம்சம் கொண்ட இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததோடு, வசூலிலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியது. 

தற்போது பாகுபலி கதை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெப் தொடராக தயாராகிறது. பாகுபலியில் ரம்யா கிருஷ்ணன் நடித்த ராஜமாதா சிவகாமிதேவி கதாபாத்திரத்தின் இளம் வயது வாழ்க்கையை மையமாக வைத்து இந்த தொடரை எடுக்கின்றனர். பாகுபலி பட காட்சிகளுக்கு முந்தைய சம்பவங்கள் இந்த தொடரில் இடம்பெற உள்ளன. சுமார் 9 எபிசோடுகளை கொண்ட இந்த வெப் தொடர், ரூ.200 கோடி பட்ஜெட்டில் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.


ரம்யா கிருஷ்ணன், வாமிகா கபி

இதில் இளம் வயது சிவகாமிதேவி கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நடிகை சமந்தாவை அணுகினர். அவர் நடிக்க மறுத்துவிட்டதால் தற்போது இளம் நடிகை வாமிகா கபியை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே தமிழில் மாலை நேரத்து மயக்கம் என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News