சினிமா
கமல்ஹாசன், நதியா

முதல்முறையாக கமலுடன் ஜோடி சேரும் நதியா?

Published On 2021-06-28 11:01 IST   |   Update On 2021-06-28 11:01:00 IST
நடிகை நதியா இதுவரை ஒரு படத்தில் கூட நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் 2013-ல் வெளியாகி வசூல் குவித்த திரிஷ்யம் படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதில் கமல்ஹாசன், கவுதமி நடித்து இருந்தனர். தெலுங்கு, இந்தி, கன்னடம், சீன மொழிகளிலும் திரிஷ்யம் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில், திரிஷ்யம் படத்தின் 2-ம் பாகமும் மோகன்லால், மீனா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தையும் தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் சீன மொழிகளில் ரீமேக் செய்வதாக அறிவித்து உள்ளனர்.


கவுதமி, நதியா

தமிழிலும் ‘திரிஷ்யம் 2’ படம் பாபநாசம் 2-ம் பாகமாக உருவாக உள்ளதாகவும், இதில் நடிக்க கமல் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் பேசப்படுகிறது. மேலும் முதல் பாகத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த கவுதமி, இரண்டாம் பாகத்தில் நடிக்க மாட்டார் என்றும், அவருக்கு பதிலாக நடிகை நதியாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த கூட்டணி உறுதியானால், நடிகை நதியா, கமலுடன் நடிக்கும் முதல் படமாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Similar News