சினிமா
ஷமன் மித்ரு

தொரட்டி பட நாயகன் ஷமன் மித்ரு கொரோனா தொற்றால் மரணம்

Published On 2021-06-17 10:27 IST   |   Update On 2021-06-17 10:28:00 IST
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த நடிகர் ஷமன் மித்ரு, இன்று காலை உயிரிழந்தார்.
குறைந்த பட்ஜெட்டில் உருவாகி விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற தொரட்டி படத்தின் மூலம் நாயகனகாக அறிமுகமானவர் ஷமன் மித்ரு. இப்படத்தை அவரே தயாரித்திருந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகர் ஷமன் மித்ரு, கடந்த ஒரு மாத காலமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 43. நடிகர் ஷமன் மித்ருவுக்கு சகுந்தலா என்ற மனைவியும், மோக்‌ஷா என்ற 5 வயது பெண் குழந்தையும் உள்ளது. 


ஷமன் மித்ரு
 
சென்னை திரைப்பட கல்லூரியில் படித்து தங்க பதக்கம் வென்ற மாணவரான அவர் தமிழ், தெலுங்கு, கன்னட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தாலும், தொரட்டி படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் தான் பிரபலமானார். அடுத்த படத்திற்கான வேலைகளை துவங்கிய நேரத்தில் அவர் கொரோனா தொற்றால் மரணமடைந்தது திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஷமன் மித்ருவின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Similar News