சினிமா
அதிரடி அறிவிப்பால் திரையரங்க உரிமையாளர்களை குஷியாக்கிய அக்ஷய் குமார்
ரஞ்சித் எம்.திவாரி இயக்கத்தில் அக்ஷய் குமார், வாணி கபூர், ஹியூமா குரோஷி, லாரா தத்தா நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘பெல் பாட்டம்’.
அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி உள்ள இந்தி படம் ‘பெல் பாட்டம்’. 1980-களில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ரஞ்சித் எம்.திவாரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் அக்ஷய் குமாருடன் வாணி கபூர், ஹியூமா குரோஷி, லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கொரோனா முதல் அலையின்போதே லண்டனில் ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்துவிட்டனர். பின்னர் பின்னணி பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வந்த சமயத்தில், கொரோனா 2-வது அலை காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டது. இதனால் இப்படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால், இப்படத்தை ஓடிடியில் வெளியிடும் முடிவை கைவிட்டுள்ளனர்.
பெல் பாட்டம் படத்தின் போஸ்டர்
ஜூலையில் திரையரங்குகள் திறப்பதற்கான சூழல் உருவாகியுள்ளதால் ‘பெல் பாட்டம்’ படத்தை, ஜூலை 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘பெல் பாட்டம்’ படக்குழுவினரின் இந்த முடிவு விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.