சினிமா
பிரியாமணி

கேங்ஸ்டர் படத்தில் நடிக்கும் பிரியாமணி

Published On 2021-06-12 16:12 IST   |   Update On 2021-06-12 16:12:00 IST
பல படங்களில் தன்னுடைய நடிப்பால் முத்திரை பதித்த நடிகை பிரியாமணி, அடுத்ததாக கேங்ஸ்டர் படத்தில் நடிக்க இருக்கிறார்.
‘பருத்தி வீரன்’ படத்தின் மூலம் நல்ல அறிமுகத்தை பெற்றவர் பிரியாமணி. இவர் சமீபத்தில் வெளியான ‘தி பேமிலி மேன் 2’ வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். தெலுங்கில் ‘நாரப்பா’, ‘விராட்டா பர்வம்’, ‘சயனைடு மோகன்’ உள்ளிட்ட பல படங்களை பிரியாமணி கைவசம் வைத்துள்ளார்.

இந்த படங்களை அடுத்து விவேக் இயக்கத்தில் புதிய படத்திலும் நடிக்க உள்ளார். இப்படம் மும்பையில் நிழல் உலக தாதாக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து கேங்ஸ்டர் படமாக உருவாகிறது.



கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பூஜை போடப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. இந்நிலையில் இந்த படம் குறித்து பேசியுள்ள நடிகை பிரியாமணி, இந்த படத்தில் ஒப்பந்தக் கொலையாளியாக நடிப்பது மிகுந்த உற்சாகம் அளிக்கிறது. மேலும் சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதால், அதற்காக தன்னை தயார்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.

Similar News