சினிமா
மீண்டும் பாலிவுட் பக்கம் சென்ற காஜல் அகர்வால்
தென்னிந்திய திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், தற்போது பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால் கடந்த வருடம் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர் கைவசம் பாரிஸ் பாரிஸ், கோஸ்டி, ஹேய் சினாமிகா, கமலுடன் இந்தியன் 2, தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஆச்சார்யா ஆகிய படங்கள் உள்ளன.
இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வால் அடுத்ததாக இந்தி படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்துக்கு ‘உமா’ என்று பெயர் வைத்துள்ளனர். இது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்ட படமாம். இதில் நடிப்பது குறித்து காஜல் அகர்வால் கூறுகையில் ‘சவாலான கதைகளில் நடிக்க தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறேன். உமா படத்திலும் சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கும்’ என்றார்.
காஜல் அகர்வால்
நடிகை காஜல் அகர்வால் ஏற்கனவே சிங்கம், ஸ்பெஷல் 26, டோ லப்சோன் கி கஹானி, மும்பை சகா போன்ற இந்தி படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.