சினிமா
பியர்ல் புரி

நடிகையின் 5 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடிகர் கைது

Published On 2021-06-06 18:17 IST   |   Update On 2021-06-06 18:17:00 IST
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நடிகரை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.
நாகின் 3- என்ற இந்தி சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகர் பியர்ல் புரி. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று உள்ளார். 31 வயதாகும் இவர் மும்பையில் வசித்து வருகிறார். 

இந்நிலையில், இவருடன் நடிக்கும் சக நடிகை ஒருவர் சம்பவத்தன்று தனது 5 வயது மகளுடன் படப்பிடிப்பு தளத்துக்கு வந்துள்ளார். அப்போது நடிகர் பியர்ல் புரி, அந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்துள்ளது. 

இதுதொடர்பாக சிறுமியின் தந்தை சமீபத்தில் மும்பை போலீசில் புகார் அளித்தார். சம்பவம் வசாய்  பகுதியில் நடந்தது என்பதால், வழக்கு அங்குள்ள வாலிவ் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இது பற்றி வாலிவ் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 


பியர்ல் புரி

இந்நிலையில் மும்பையில் இருந்த நடிகரை அம்போலி போலீஸ் உதவியுடன் வாலிவ் போலீசார் கைது செய்தனர். அவர் மீது கற்பழிப்பு மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இவரை வசாய் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது நடிகர் பியர்ல் புரியை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

Similar News