சினிமா
ராஜமவுலி

குறும்படம் இயக்க தயாராகும் ராஜமவுலி

Published On 2021-06-06 17:57 IST   |   Update On 2021-06-06 17:57:00 IST
பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களை இயக்கியதன் மூலம் பிரம்மாண்ட இயக்குனர் என பெயரெடுத்த ராஜமவுலி, அடுத்ததாக குறும்படம் ஒன்றை இயக்க உள்ளாராம்.
ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வெளியான படம் ‘பாகுபலி’. இரண்டு பாகங்களாக வெளியான இப்படத்தில் பிரபாஸ் ஹீரோவாகவும், ராணா வில்லனாகவும் நடிக்க, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த இரண்டு பாகங்களும் உலகமெங்கும் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக வசூலையும் வாரிக்குவித்து சாதனை படைத்தது. 

இதையடுத்து இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் தற்போது ஆர்.ஆர்.ஆர் எனும் பிரம்மாண்ட படம் உருவாகி வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. 


ராஜமவுலி

இந்நிலையில், இயக்குனர் ராஜமவுலி குறும்படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொரோனா பேரிடர் காலத்தில் காவல்துறையின் பங்களிப்பையும், அர்ப்பணிப்பையும் சொல்லும்விதமாக 20 நிமிடங்களுக்குள் ஒரு குறும்படத்தை இயக்க  திட்டமிட்டுள்ளாராம் ராஜமவுலி.

இது சம்பந்தமாக தெலுங்கானா காவல்துறை அதிகாரிகளையும் அவர் சந்தித்துள்ளார். ஆர்ஆர்ஆர் படப்பிடிப்பை தொடங்குவதற்குள் குறும்படத்தை முடிக்கும் முனைப்பில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது.

Similar News