சினிமா
மலைக்கா அரோரா, அர்ஜுன் கபூர்

காதலியின் வீடருகே சொகுசு பங்களா வாங்கிய வாரிசு நடிகர்

Published On 2021-05-31 09:18 IST   |   Update On 2021-05-31 09:18:00 IST
பிரபல வாரிசு நடிகர் ஒருவர் தனது காதலியின் வீடருகே ரூ.20 கோடிக்கு சொகுசு பங்களா ஒன்றை வாங்கி உள்ளாராம்.
பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த தாரத்து மகனான அர்ஜுன் கபூர், தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கிறார். இவர், தன்னை விட 12 வயது பெரியவரான நடிகை மலைக்கா அரோராவை காதலித்து வருகிறார். 

நடிகை மலைக்கா அரோரா, கடந்த 1998-ம் ஆண்டு பிரபல இந்தி நடிகர் சல்மான்கானின் சகோதரர் அர்பாஸ்கானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அர்கான் என்ற மகனும் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017ம் ஆண்டு அர்பாஸ்கானை பிரிந்த மலைக்கா அரோரா, அதன்பின் அர்ஜூன் கபூர் மீது காதல் வயப்பட்டார். 


மலைக்கா அரோரா, அர்ஜுன் கபூர்

இந்நிலையில், நடிகர் அர்ஜுன் கபூர் மும்பையில் உள்ள பந்த்ரா பகுதியில் ரூ.20 கோடிக்கு சொகுசு வீடு ஒன்றை வாங்கி உள்ளார். இவரது காதலி மலைக்கா அரோராவும் அதே பகுதியில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் அர்ஜுன் கபூரின் தந்தை போனி கபூர் தற்போது தமிழில் அஜித் நடிப்பில் உருவாகும் வலிமை படத்தை தயாரித்து வருகிறார்.

Similar News