சினிமா
நடிகை பியா

கொரோனா டெஸ்ட் எடுத்து ஒரு வாரம் ஆச்சு... இன்னும் ரிசல்ட் வரல - பிரபல நடிகை புகார்

Published On 2021-05-14 08:30 IST   |   Update On 2021-05-14 08:30:00 IST
கொரோனா டெஸ்ட் எடுத்து ஒரு வாரம் ஆகியும், அதற்கான முடிவுகள் இன்னும் வரவில்லை என பிரபல நடிகை புகார் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த வாரம் நடிகை பியாவின் சகோதரர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். மருத்துவ உதவி கிடைக்காததால் அவர் உயிரிழந்ததாக நடிகை பியா தெவித்தார்.

இதனைத் தொடர்ந்து நடிகை பியாவின் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஒரு வாரம் ஆகியும், அதற்கான முடிவுகள் இன்னும் வரவில்லை என நடிகை பியா தற்போது புகார் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “கடந்த மே 7ம் தேதி என்னுடைய மொத்த குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை முடிவுகள் வரவில்லை. அதுகுறித்து எந்த தகவலும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகின்றனர். கடவுளின் அருளால் என் குடும்பம் பாதுகாப்பாக உள்ளது” என பதிவிட்டுள்ளார்.

நடிகை பியா, தமிழில் ஏகன், கோவா, கோ போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News