சினிமா
விவேக்கின் மனைவி அருள்செல்வி

எங்களுக்கு பக்க பலமாக இருந்த அரசுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி - நடிகர் விவேக் மனைவி அருள்செல்வி

Published On 2021-04-18 15:10 IST   |   Update On 2021-04-18 16:41:00 IST
நடிகர் விவேக்கின் குடும்பத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர், அப்போது அவரின் மனைவி அருள்செல்வி மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்தார்
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் விவேக். தமது காமெடி மூலமாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்த்துள்ள இவர் நேற்று காலமானார். இவரது உடல் நேற்று மாலை காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று நடிகர் விவேக்கின் குடும்பத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர். விவேக்கின் மனைவி அருள்செல்வி மகள்கள் அமிர்த நந்தினி, தேஜஸ்வினி, மைத்துனர் செல்வகுமார் பத்திரிகையாளர் சந்திப்பின்போது உடனிருந்தனர்.

பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய விவேக்கின் மனைவி அருள்செல்வி, “எங்களுக்கு பக்க பலமாக இருந்த மத்திய, மாநில அரசிற்கு நன்றி, அரசு மரியாதை அளித்ததற்கு அரசிற்கு நன்றி, இறுதி வரை உடன் இருந்த காவல்துறைக்கும், ஊடக்கத்துறைக்கும் நன்றி. இறுதி அஞ்சலியில் பங்கு பெற்ற கோடான கோடி ரசிகர்கர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்” என்றார்.

Similar News