சினிமா
மகேஷ் பாபு, விஜய்சேதுபதி

மகேஷ் பாபுவுக்கு ஜோடியாகும் விஜய்சேதுபதியின் ரீல் மகள்

Published On 2021-03-11 21:07 IST   |   Update On 2021-03-11 21:07:00 IST
விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்ற உப்பென்னா திரைப்படம், 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது.
தெலுங்கில் காதலர் தினத்தன்று வெளியான படம் உப்பென்னா. இப்படத்தை அறிமுக இயக்குனர் பிச்சிபாபு சனா இயக்கி இருந்தார். விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்ற இப்படம், 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது.

புதுமுகங்கள் வைஷ்ணவ் தேஜ், கீர்த்தி ஷெட்டி நடித்திருந்த இப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி வில்லனாக மிரட்டி இருந்தார். அவரின் கதாபாத்திரம் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்ததோடு, ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. 



இந்நிலையில், இப்படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்திருந்த நடிகை கீர்த்தி ஷெட்டி, அடுத்ததாக மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளராம். உப்பென்னா படத்தில் கீர்த்தி ஷெட்டியின் நடிப்பை பார்த்து வியந்த மகேஷ் பாபு, அவருக்கு இந்த வாய்ப்பை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை பிரபல தெலுங்கு பட இயக்குனர் அனில் ரவிபுடி இயக்க உள்ளாராம்.

Similar News