சினிமா
அஹானா கிருஷ்ணா

அரசியல் காரணமாக அந்தாதூன் ரீமேக்கில் இருந்து பிரபல நடிகை நீக்கப்பட்டாரா? - படக்குழு விளக்கம்

Published On 2021-03-11 15:37 IST   |   Update On 2021-03-11 15:37:00 IST
அந்தாதூன் படம் தமிழில் ‘அந்தகன்’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது, இதில் பிரசாந்த் நாயகனாக நடிக்க அவரது தந்தை தியாகராஜன் இயக்குகிறார்.
இந்தியில் வெற்றி பெற்ற அந்தாதூன் படத்தின் மலையாள ரீமேக்கான ‘பிரம்மம்’ படத்தில் பிருதிவிராஜ், மம்தா மோகன்தாஸ் ஆகியோர் நடிக்கின்றனர். தமிழில் மனிதன், முகமூடி, பில்லா 2, சத்யம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மலையாள நடிகர் கிருஷ்ணகுமாரின் மகளும், மலையாள நடிகையுமான அஹானா கிருஷ்ணாவையும் ‘பிரம்மம்’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து இருந்தனர். 

ஆனால் தற்போது திடீரென்று படத்தில் இருந்து அஹானாவை நீக்கி விட்டனர். அஹானாவின் தந்தை கிருஷ்ணகுமார் சமீபத்தில் பா.ஜ.க.வில் இணைந்ததால் அஹானாவை ‘பிரம்மம்’ படத்தில் இருந்து நீக்கி விட்டதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது.



இதற்கு விளக்கம் அளித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரம்மம் படத்தின் நடிகர், நடிகை தேர்வில் எந்த அரசியல் தொடர்பும் இல்லை. படத்துக்கு அஹானாவை தேர்வு செய்து போட்டோஷூட் நடத்தியபோது கதாபாத்திரத்துக்கு அவர் பொருத்தமாக இல்லை என்று தெரிந்ததால் அவரிடம் தெரியப்படுத்தி மன்னிப்பு கேட்டோம். இதில் எந்த அரசியல் காரணமும் இல்லை” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

அந்தாதூன் படம் தமிழில் ‘அந்தகன்’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது, இதில் பிரசாந்த் நாயகனாக நடிக்க அவரது தந்தை தியாகராஜன் இயக்குகிறார்.

Similar News