சினிமா
கிரிக்கெட் வீராங்கனைகள், விஜய்

வெற்றிக் களிப்பில் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடிய இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள்

Published On 2021-03-10 13:23 IST   |   Update On 2021-03-10 21:35:00 IST
வேதா கிருஷ்ணமூர்த்தி, ஆகான்ஷா கோலி, திவ்யா, வனிதா மற்றும் மம்தா ஆகியோர் வாத்தி கம்மிங் பாடலுக்கு உற்சாகமாக நடனமாடியுள்ளனர்
‘வாத்தி கம்மிங்’ பாடல், விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெற்றது. அனிருத் இசை அமைத்துள்ள இப்பாடல் வெளியாகி ஓராண்டு ஆனாலும், ரசிகர்களிடம் இப்பாடலுக்கான வரவேற்பு குறைந்தபாடில்லை. பிரபலங்கள் பலரும் இப்பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த மாதம், இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அஸ்வின், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோர், இப்பாடலுக்கு நடனமாடிய வீடியோ வெளியாகி வைரலானது. இந்நிலையில், ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகள் நடனமாடியுள்ளனர். 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி, நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் அசத்தல் வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக இந்திய வீராங்கனைகள் வேதா கிருஷ்ணமூர்த்தி, ஆகான்ஷா கோலி, திவ்யா, வனிதா மற்றும் மம்தா ஆகியோர் வாத்தி கம்மிங் பாடலுக்கு உற்சாகமாக நடனமாடியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Similar News