சினிமா
வசந்தபாலன்

இயக்குனர் வசந்தபாலனின் 25 வருட கனவு

Published On 2021-02-11 20:55 IST   |   Update On 2021-02-11 20:55:00 IST
வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய வசந்தபாலன் 25 வருட கனவு என்று கூறியிருக்கிறார்.
இயக்குனர் ஷங்கருடன் துணை, இணை இயக்குனராக பணியாற்றி ஆல்பம் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வசந்தபாலன். இப்படத்தை தொடர்ந்து வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கினார்.

தற்போது ஜி.வி.பிரகாஷ் நடித்து, இசையமைக்கும் ஜெயில் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றன. இந்நிலையில், காமராஜர் படித்த நூறு ஆண்டுகளைக் கடந்த பெருமைமிகு பள்ளியான க்ஷத்திரிய வித்யாசாலாவில் தன்னுடன் பயின்ற மூன்று நண்பர்களுடன் இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் என்னும் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை இயக்குனர் வசந்தபாலன் தொடங்கியுள்ளார்.



விரைவில் இவர்கள் தயாரிக்கவுள்ள திரைப்படத்தின் பெயரும், அதில் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகளின் பெயர்களும் அறிவிக்கப்பட இருக்கிறார்கள். தனது முந்தைய படங்களைப் போலவே, புதிய படமும் கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அழுத்தமாகவும், அதே சமயம் ஜனரஞ்சகமாகவும் இருக்கும் என்று இயக்குனர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார். மேலும் இது எனது 25 வருட கனவு என்றும் கூறியுள்ளார்.

Similar News