‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறதாம்.
‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்
பதிவு: ஜனவரி 26, 2021 14:12
தேசிங்கு பெரியசாமி
துல்கர் சல்மானின் 25-வது படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. புதுமுக இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கிய இப்படம் கடந்தாண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பிரபலங்கள் பலரும் இப்படத்தை பாராட்டினர். குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டினார்.
இந்நிலையில், இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறதாம். அவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் 2-வது ஹீரோயினாக நடித்த நிரஞ்சனியை திருமணம் செய்ய உள்ளாராம். இவர் இயக்குனர் அகத்தியனின் மகள் ஆவார்.
இது காதல் திருமணம் இல்லையாம், முழுக்க முழுக்க பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாம். இவர்கள் திருமணம் வருகிற பிப்ரவரி மாதம் 25-ந் தேதி பாண்டிச்சேரியில் நடைபெற உள்ளது. பின்னர் சினிமா பிரபலங்கள் கலந்துகொள்ளும் விதமாக சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.