உண்மை முகமும், மாற்றிக்கொள்ளும் குணமும் என்னை கவர்ந்தது என்று பிரபல இயக்குனர் பாலாஜியை வாழ்த்தி இருக்கிறார்.
உண்மை முகமும், மாற்றிக்கொள்ளும் குணமும் கவர்ந்தது... பாலாஜியை வாழ்த்திய பிரபல இயக்குனர்
பதிவு: ஜனவரி 18, 2021 15:59
பாலா
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் கடந்த அக்டோபர் 4ந் தேதி தொடங்கியது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதில் இறுதிப்போட்டிக்கு ஆரி, பாலா, சோம், ரியோ, ரம்யா ஆகிய 5 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களில் அதிக வாக்குகள் பெற்ற ஆரி டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து ஆரிக்கு டைட்டில் வின்னருக்கான கோப்பையும், ரூ.50 லட்சத்துக்கான காசோலையையும் கமல்ஹாசன் வழங்கினார். ஆரிக்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இயக்குனரும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரும் ஆன சேரன், ஆரிக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். அதுபோல், "BBல் runner ஆக வெற்றிபெற்று இரண்டாம் இடத்தை பெற்ற பாலாஜியின் உண்மை முகமும் எதையும் சுலபமாக கடந்துசென்று தன்னை மாற்றிக்கொள்ளும் குணமும் கவர்ந்தது.. கண்டிப்பாக பக்குவப்படப்பட வாழ்க்கையில் உயர்வார்.. வாழ்த்துக்கள் பாலாஜி" என குறிப்பிட்டு உள்ளார்.
Related Tags :