கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் சூரரைப் போற்று பட பிரபலம் ஒருவர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
‘தனுஷ் 43’ படத்தில் இணைந்த சூரரைப் போற்று பிரபலம்
பதிவு: ஜனவரி 18, 2021 11:50
தனுஷ், கார்த்திக் நரேன்
துருவங்கள் பதினாறு, மாஃபியா போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் அடுத்ததாக தனுஷின் 43-வது படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் நடிக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கியது.
இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கிருஷ்ணகுமார் ஒப்பந்தமாகி உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவர் சுதா கொங்கரா இயக்கிய சூரரைப் போற்று படத்தில் சூர்யாவின் நண்பராக நடித்திருந்தார். அப்படத்தின் அவரின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இயக்குனர் கார்த்திக் நரேனுடனும், தனுஷ் 43 படக்குழுவினருடனும் பணியாற்ற ஆர்வமுடன் இருப்பதாக கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.
Related Tags :