சினிமா
பிரசாந்த், கே.எஸ்.ரவிகுமார்

19 ஆண்டுகளுக்கு பின் பிரசாந்துடன் இணைந்த கே.எஸ்.ரவிகுமார்

Published On 2021-01-10 13:19 IST   |   Update On 2021-01-10 13:22:00 IST
பிரசாந்த் நடிப்பில் உருவாக உள்ள அந்தகன் படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் 'அந்தாதூன்'. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர். அந்தகன் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். இதற்காக அவர் பிரத்யேகமாக பியானோ பயிற்சி பெற்றுள்ளார்.

மேலும் நடிகை சிம்ரனும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்தும், சிம்ரனும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். பொன்மகள் வந்தாள் பட இயக்குனர் பெட்ரிக் இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். 



இந்நிலையில், பிரபல இயக்குனரும் நடிகருமான கே.எஸ்.ரவிகுமார், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இவர் ஏற்கனவே கடந்த 2002-ம் ஆண்டு வெளியான தமிழ் படத்தில் பிரசாந்துடன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தகன் படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Similar News