சினிமா
பாபுவுடன் பாரதிராஜா

20 வருடங்களாக உயிருக்கு போராடும் நடிகர் பாபு... நேரில் சந்தித்து கண்கலங்கிய பாரதிராஜா

Published On 2021-01-09 14:51 IST   |   Update On 2021-01-09 16:08:00 IST
20 வருடங்களாக உயிருக்கு போராடி வரும் நடிகர் பாபுவை நேரில் சந்தித்த இயக்குனர் பாரதிராஜா கண்கலங்கி இருக்கிறார்.
இயக்குநர் பாரதிராஜாவின் "என் உயிர்த் தோழன்" படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி, கடந்த 20 வருடமாக உயிருக்குப் போராடி வரும் நடிகர் பாபு-வின் நிலைமையை பற்றி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

முதல் படத்திலேயே முத்திரை பதித்த பாபு, அடிமட்ட அரசியல் தொண்டனாக வந்து அனைவரையும் தனது நடிப்பால் கவர்ந்தார். அந்த நடிப்பால் அவருக்குப் பட வாய்ப்புகள் குவிந்தன. கிட்டத்தட்ட 14 படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டார் பாபு.

ஆனால் நான்கைந்து படங்களில் மட்டுமே நடித்த பாபுவுக்கு "மனசார வாழ்த்துங்களேன்" படத்தில் நடித்தபோதுதான் சோதனை ஏற்பட்டது. ஒரு சண்டைக் காட்சிக்காக மாடியிலிருந்து குதித்தபோது அவருக்கு முதுகில் அடிபட்டது. தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்த போதிலும், பாபுவால் அதன் பிறகு எழுந்து நடமாட முடியவில்லை. படுத்த படுக்கையான அவர், கடந்த 20 வருடமாக படுக்கையில் இருந்தபடி சிகிச்சை பெற்று வருகிறார். 



சமீபத்தில் அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க போன பாரதிராஜா கண்கலங்கி கொஞ்சம் உதவி செய்து விட்டு வந்துள்ளார். பாபுவை பாரதிராஜா சந்தித்த வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வரைலாகி வருகிறது. 

Similar News