தொடர்புக்கு: 8754422764

2021-ல் ரிலீசுக்காக காத்திருக்கும் பிரம்மாண்ட படங்கள்.... வழிவிடுமா கொரோனா?


யாஷின் கேஜிஎப் 2. 2018-ம் ஆண்டு வெளியான கேஜிஎப் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பால் இப்படத்தை மிகப்பிரம்மாண்டமாக உருவாக்கி உள்ளனர். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இதில் வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடக்கின்றன. ஓரிரு மாதங்களில் இப்படம் வெளியாக வாய்ப்புள்ளது.விக்ரமின் கோப்ரா, துருவ நட்சத்திரம் ஆகிய படம் உருவாகியுள்ளது. இதில் கோப்ரா படத்தை அஜய் ஞானமுத்துவும் துருவ நட்சத்திரம் படத்தை கௌதம் மேனன் இயக்கி இருக்கிறார்கள்.தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் கர்ணன், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம், ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அத்ரங்கி ரே ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.விஜய் சேதுபதிக்கு லாபம், கடைசி விவசாயி, இடம் பொருள் ஏவல், மாமனிதன், காத்துவாக்குல ரெண்டு காதல், கொரோனா குமார், முகிழ் என மாதத்துக்கு ஒரு படம் ரிலீஸ் பண்ணும் அளவுக்கு கைவசம் வைத்துள்ளார்.கார்த்தி நடித்துள்ள சுல்தான் திரைப்படமும் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

இப்படங்கள் அனைத்தும் வெளியாகுமா என்று பொருத்துதான் பார்க்க வேண்டும்.