சினிமா
ஜனனி

பிரபல நடிகருக்கு ஜோடியான ஜனனி

Published On 2021-01-04 21:18 IST   |   Update On 2021-01-04 21:18:00 IST
நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான ஜனனி ஐயர் பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
பரத் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான காளிதாஸ் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து 8, நடுவண், ராதே, 6 ஹவர்ஸ், ஷணம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் இந்தி மற்றும் மலையாள படங்களும் அடங்கும். அடுத்து முழுநீள காதல் படமாக உருவாகும் யாக்கை திரி படத்தில் நடிக்கிறார். பரத் மோகன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் பரத் மற்றும் ஜனனி ஐயர் இருவரும் ஜோடியாக நடிக்க இருக்கின்றனர்.

சோனாக்‌சி சிங் ராவட் என்ற பாலிவுட் நடிகையும் இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். மீரகி புரடக்‌ஷன் சார்பில் சபரீஷ் குமார் தயாரிக்கிறார். உணர்ச்சிப்பூர்வமிக்க கதைக்களத்துடன் இந்தப் படம் உருவாகிறது.



மேலும் பகவதி பெருமாள், நிரஞ்சனி, பிரதாப் போத்தன், பாண்டியராஜன், சுதா சந்திரன், கு.ஞானசம்பந்தம் ஆகியோரும் நடிக்கிறார்கள். பல்லு ஒளிப்பதிவு செய்ய அரோல் கரோலி இசையமைக்கிறார். இயக்குனர் பரத் மோகன் ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்ற இக்லூ படத்தை இயக்கியவர்.

Similar News