சினிமா
சாண்டி

சாண்டிக்கு கைகொடுத்த மாஸ்டர் படக்குழு

Published On 2021-01-04 18:16 IST   |   Update On 2021-01-04 18:16:00 IST
தமிழ் சினிமாவின் நடன இயக்குனரும் பிக்பாஸ் பிரபலமான சாண்டிக்கு மாஸ்டர் படக்குழுவினர் கைகொடுத்து இருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவின் பிரபல டான்ஸ் மாஸ்டர் சாண்டி. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டார். அதில் அவருக்கென தனி பாணியில் பேச்சு, நகைச்சுவை என கவனம் ஈர்த்தார். அவருக்கான ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகியது. 

டான்ஸ் மாஸ்டரான சாண்டி, பிக் பாஸ் வெளிச்சத்தினால் நாயகனாகவும் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். 3:33 (மூணு முப்பத்தி மூணு) என்று இந்தப் படத்துக்குப் பெயரிடப்பட்டுள்ள இந்த படம் முழு நீள திகில் படமாக ஒவ்வொரு காட்சியும் பயமுறுத்தும் வகையில் உருவாகியுள்ளது. சாண்டிக்கும் படத்தில் சீரியசான கதாபாத்திரம். 

சதீஷ் மனோகரன் ஒளிப்பதிவு செய்ய ஹர்ஷவர்த்தன் இசையமைக்கிறார். பாம்பூ ட்ரீஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பாக ஜீவிதா கிஷோர் தயாரிக்கிறார். அறிமுக இயக்குநர் நம்பிக்கை சந்துரு இயக்கியிருக்கும் இந்த படத்தில் மற்றொரு பிக்பாஸ் போட்டியாளரான ரேஷ்மாவும் நடிக்கிறார். இவரோடு ரமா, ஸ்ருதி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.



இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் வெளியிட்டார்கள்.

Similar News