கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள படத்தின் மூலம் பிரபல பாடலாசிரியர் விவேக் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
தனுஷ் படத்திற்காக புதிய அவதாரம் எடுக்கும் பாடலாசிரியர் விவேக்
பதிவு: ஜனவரி 04, 2021 14:57
விவேக், தனுஷ்
கார்த்திக் சுப்புராஜின் ஜகமே தந்திரம், மாரி செல்வராஜின் கர்ணன், ஆனந்த் எல் ராயின் அத்ரங்கி ரே போன்ற படங்களில் நடித்து முடித்துள்ள தனுஷ், அடுத்ததாக துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க மாளவிகா மோகனன் ஒப்பந்தமாகி உள்ளார்.
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இப்படத்திற்கான ஆரம்பக் கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுத பிரபல பாடலாசிரியர் விவேக் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் வசனம் மற்றும் திரைக்கதை எழுதும் முதல் படம் இதுவாகும். இவர் மெர்சல், பிகில், சர்கார், பேட்ட போன்ற படங்களுக்கு பாடல்களை எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :