சினிமா
நர்சிங் யாதவ்

ரஜினி, விஜய் பட நடிகர் திடீர் மரணம்

Published On 2021-01-01 15:55 IST   |   Update On 2021-01-01 15:55:00 IST
ரஜினியுடன் பாட்ஷா படத்திலும் விஜயுடன் குருவி படத்திலும் நடித்த நடிகர் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார்.
பிரபல தெலுங்கு நடிகர், நர்சிங் யாதவ். தமிழ், தெலுங்கு, இந்தி என சுமார் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ராம்கோபால் வர்மாவின் அனைத்து படங்களிலும் பார்க்கலாம்.

தமிழில், ரஜினியின் சூப்பர் ஹிட் படமான பாட்ஷா, ஹரி இயக்கத்தில் விஷால், ஸ்ருதிஹாசன் நடித்த பூஜை, சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம் நடித்த ராஜபாட்டை, சக்தி, ரம்யா நம்பீசன் நடித்த ஆட்டநாயகன், பிரபு சாலமன் இயக்கத்தில் சார்மி நடித்த லாடம், விஜய், த்ரிஷா நடித்த குருவி உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.



கடந்த சில மாதங்களாகவே சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த நர்சிங் யாதவ், அதற்கான சிகிச்சையை பெற்று வந்தார். இந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நர்சிங்கின் மரணத்திற்கு ரசிகர்களும், திரையுலகினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Similar News