சினிமா
சிவானி, அகிலா, சின்மயி

பெத்த மகளை இப்படியா அசிங்கப்படுத்துவது? - சிவானி தாய்க்கு சின்மயி கண்டனம்

Published On 2021-01-01 08:39 IST   |   Update On 2021-01-01 18:02:00 IST
பிக்பாஸ் வீட்டுக்கு வந்த சிவானியின் தாயார், அவரை திட்டியதற்கு, பாடகி சின்மயி டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் வந்தனர். அதில் முதல் நபராக வந்த சிவானியின் அம்மா, சிவானியை வறுத்தெடுத்தார். சிவானியின் அம்மா நடந்து கொண்ட விதம் சக போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி பிக்பாஸ் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. 

ஒரு பக்கம் சிவானியை அவரது அம்மா கண்டித்ததற்கு சிலர் பாராட்டு தெரிவித்தாலும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சி என்று பார்க்காமல் தனது மகளை இவ்வாறு திட்டி அசிங்கப்படுத்தி இருக்கக்கூடாது என்றும் பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



இந்நிலையில் பாடகி சின்மயி இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில், “நான் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்ப்பதில்லை, ஆனால் அந்த தாய் தன் மகளை அசிங்கப்படுத்தியதை நான் கேள்விப்பட்டேன். அது எனக்கு மிகவும் தவறாக தெரிகிறது.

ஊர்ல 4 பேர் என்ன சொல்வாங்கனு சொல்லி பல அம்மாக்கள் தங்களுடைய மகள்களை அசிங்கப்படுத்துகிறார்கள். நீங்கள் பெற்றோர் எனில், தயவு செய்து உங்கள் மகளின் குணாதிசயங்களை அசிங்கப்படுத்துவதை நிறுத்திவிட்டு பொறுப்புடன் பேசுங்கள்” என சின்மயி கூறியுள்ளார்.

Similar News