சினிமா
ரேகா, சுரேஷ் சக்ரவர்த்தி, அர்ச்சனா, நிஷா

அனிதா தந்தை மறைவு.... நேரில் சென்று ஆறுதல் கூறிய பிக்பாஸ் பிரபலங்கள்

Published On 2020-12-31 08:30 IST   |   Update On 2020-12-31 08:30:00 IST
பிக்பாஸ் பிரபலங்களான அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ரேகா ஆகியோர் அனிதாவின் தந்தை உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
பிரபல செய்தி வாசிப்பாளரும், நடிகையுமான அனிதா சம்பத், பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கடந்த வாரம் தான் எலிமினேட் செய்யப்பட்டார். இவரது தந்தையும், எழுத்தாளருமான சம்பத், வயது மூப்பு காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். தந்தையை இழந்த அனிதாவுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.



இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனிதாவுடன் சக போட்டியாளர்களாக பங்கேற்ற அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ரேகா ஆகியோர் அனிதாவின் தந்தை உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும் அனிதாவிற்கும் அவர்கள் ஆறுதல் கூறினர். இதேபோல் நடிகை சனம் ஷெட்டி, நடிகர் ஜித்தன் ரமேஷ் ஆகியோரும் அனிதாவின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Similar News