சினிமா
சரத்குமார் - ராதிகா

கோவிலில் சிறப்பு பிரார்த்தனை செய்த சரத்குமார் - ராதிகா

Published On 2020-12-30 18:35 IST   |   Update On 2020-12-30 18:35:00 IST
நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமார் தனது மனைவி ராதிகாவுடன் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை செய்து இருக்கிறார்.
நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமாருக்கு சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சமீபத்தில் குணமடைந்து வீடு திரும்பினார்.

இந்த நிலையில் கொரோனாவில் குணமாகி திரும்பி வந்த சரத்குமார் தனது மனைவி ராதிகாவுடன் காஞ்சி காமாட்சி கோவிலில் சென்று வழிபாடு நடத்தினார். அங்கு உள்ள கோவிலில் சரத்குமார் மற்றும் ராதிகா ஆகிய இருவரும் மாலையும் கழுத்துமாக இருப்பதும் பூசாரிகள் பூஜை செய்து அவருக்கு பிரசாதம் கொடுப்பதுமான புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.



இந்த நிலையில் இதுகுறித்து ராதிகா தனது சமூக வலைத்தள பக்கத்தில், காஞ்சி காமாட்சியின் ஆசிர்வாதம் கிடைக்க கோவிலுக்கு வந்துள்ளோம். சரத்குமார் குணமாக பிரார்த்தனை செய்த அத்தனை மதங்களின் அற்புதமான ஆத்மாக்களுக்கு நன்றி. கொரோனாவில் இருந்து சரத்குமார் குணமாக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் கைகூப்பி எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

Similar News