சினிமா
தேவர் பட போஸ்டர்

பரபரப்பை ஏற்படுத்தும் தேவர் பட போஸ்டர்

Published On 2020-12-28 00:33 IST   |   Update On 2020-12-28 17:20:00 IST
ஊமை விழிகள் பட புகழ் அரவிந்தராஜ் இயக்கத்தில், ஜெ.எம்.பஷீர் நடிப்பில் உருவாகி வரும் தேசிய தலைவர் படத்தின் புதிய போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு 'தேசிய தலைவர்' என்ற பெயரில் திரைப்படமாக உருவாக உள்ளது. ட்ரென்ட்ஸ் சினிமாஸ் மற்றும் எம்டி சினிமாஸ் நிறுவனங்களின் சார்பில், இந்தப்படத்தை ஜெ.எம்.பஷீர் மற்றும் ஏ.எம்.சௌத்ரி இணைந்து தயாரிக்கின்றனர்.

தேவர் கதாபாத்திரத்தில் ஜெ.எம்.பஷீர் நடிக்கிறார்.. இஸ்லாமியரான இவர் விரதமிருந்து தேவராக வேடமிட்டு நடிக்கிறார். இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தை, 'ஊமை விழிகள்', 'உழவன் மகன்', 'கருப்பு நிலா' என விஜயகாந்த் நடித்த வெற்றி படங்களை தந்த அரவிந்தராஜ் இயக்குகிறார். 



இந்நிலையில் இப்படத்தின் போஸ்டர் ஒன்று சமூக வலைத்தளத்தில் லீக்காகி உள்ளது. அதில், பசும் பொன் முத்துராமலிங்க தேவர் இளமை தோற்றத்திலும், கொஞ்சம் வயதான தோற்றத்திலும் இருக்கிறார். பின்னணியில் காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், காமராஜர் உள்ளிட்ட தலைவர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. 

போஸ்டரை பார்க்கும் போது, போராட்ட காலத்தில் யாரும் அறிப்படாத பல உண்மை சம்பவங்கள் இப்படத்தில் இடம் பெறும் என்று எதிர்பார்க்க படுகிறது. உண்மைச் சம்பவங்களை படமாக்கினால் படத்திற்கு பிரச்சனைகள் ஏற்படும் என்று சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Similar News