சினிமா
தாமஸ் ஆண்டனி

திறமைக்கு வாய்ப்பளிப்பதில் தமிழ் சினிமாவுக்கு தான் முதலிடம் - மலையாள நடிகர் புகழாரம்

Published On 2020-12-18 12:47 IST   |   Update On 2020-12-18 12:47:00 IST
திறமைக்கு வாய்ப்பளிப்பதில் தமிழ் சினிமா தான் முதலிடத்தில் இருப்பதாக மலையாள நடிகர் தாமஸ் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
மோகன்லால், மம்மூட்டி, ஜெயராம், முகேஷ் என மலையாளத்தில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கும் தாமஸ் ஆண்டனி, ‘கடத்தல் காரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

இவர் தமிழ் சினிமா பற்றி கூறியதாவது: தமிழ் சினிமாவும் தமிழகமும் எனக்கு மிகவும் பிடிக்கும். திறமையானவர்களுக்கு வாய்ப்பளிப்பதில் தமிழ் சினிமாவுக்கு தான் முதலிடம். பல வருடங்களாக மலையாள சினிமாவில் இருக்கிறேன். ஆனால், அங்கு எனது திறமைக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. 

அதே தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே என் நடிப்பை வெளிக்காட்டும் மிகப்பெரிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தான் தமிழ் சினிமா. இங்கு திறமைக்கு வாய்ப்பும், மரியாதையும் கிடைக்கும். தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடித்துக் கொண்டிருப்பேன்.



தமிழ் சினிமா இயக்குநர்கள் அனைவரும் திறமையானவர்கள். கமர்ஷியல் படங்களில் கூட நல்ல மெசேஜ் சொல்லக்கூடியவர்கள். 
அதனால் அனைத்து இயக்குநர்களின் படங்களையும் விரும்பி பார்ப்பேன். 

தற்போது இயக்குநர் வெற்றிமாறன், பா.இரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ் போன்றவர்களின் படங்களை அதிகமாக பார்க்கிறேன். அவர்களுடைய படங்களில் சிறு வேடம் என்றால் கூட நடிக்க தயாராக இருக்கிறேன். என நடிகர் தாமஸ் ஆண்டனி கூறினார்.

Similar News